தம்பிரான் மகாதேவா
thambiraan magaadhevaa
தம்பிரான் மகாதேவா தாமதமேன் வா வா தம்பிராநீ மகாதேவாநீ தாமதமேன் வா வா தாமதமேன் வாவா கடுகத் தாமதமேன் வாவா நம்பரா தேவ நரா ஞானச் சிங்காரா - தம்பி
1. ஆதம்வினை தீர நரனான சித்திரமே அதி தருண மித்திரமே அடியேன் விண்ணபத்திரம் தாமதமேன் வாவா - தம்பி
2. இசறவேலர்க்கொரு கிறிஸ்துவே யேசுநாயகா எங்கணும் வியாபகா எமையேகா சுகமா தாமதமேன் வாவா - தம்பி
3. அற்புதத்தின் கிருபைக்கையா அருமை மேசையா அதி பிரியத்துவ நேயா சகாயா அல்லேலூயா - தம்பி
4. ஆதியடி முடி நடுவான சீலமே யருண் மாவிசாலமே ஓகோகோ ஆதி மூலம் தாபசமேன் வாவா- தம்பி
5. கருணைத் தயாபா நீ ஜீவா காரணத் தேவா வேதநாயகன் பாவா சதாசிவ கர்த்தா யோவா தாமதமேன் வாவா. - தம்பி
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal