ததியிது தானே நின்
thadhiyidhu thaanae nin
ததியிது தானே நின் தயவு செய் கோனே.
கதியுலாவிய சாலேம் நகர்கதி காரியுதாரி கிருபைவாரி அகாரி
1. தாவீதின் குமரா வலியவே தாளம்படுஞ்சமரா ஜீவாதிபதி தேவபிதாவுட திரமே பரமே வரமே சிரமே
2. தேவநாயகா நித்திய ஜீவதாயகா பாவியெனைக் கிருபையாய் முகம்பார் மகா பக்கிஷமே பொக்கிஷமே முக்கிய வனுக்கிரகமே
3. பரமதந்தையே எனக்கெனப் பரிந்து வந்தையே நரஜீவதயா பரசருவேசுரா நம்பிக்கொண்டேபதங் கும்பிட்டு நிற்கிறேன்
4. அருமை ரட்சகா நரர்க்குற வானதட்சகா உரிமையாய்வரும் பெருமைத்தேவனே உன்னையே நம்பினேன் என்னைக் கைவிடாதேயும்
5. ஆதிமூலமே உமக் கபையம் ஓலமே வேத நாயக னோது மானுவேல் மேசையா யேசையா மெய்யான என்னையாவே கேள்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal