சுவாமி யுன்றன் கிருபைக்க
suvaami yundran kirubaikka
சுவாமி யுன்றன் கிருபைக்க பயமே துணை செய்யும் நயமே.
1. அவாவே யென தருமைப் பெருமான் அன்பே நான் துன்பப் படுவேனோ அநியாய வுலகில்.
2. உலகானது திரும்பத் திரும்ப வொழி யாத்துயர் களை வருத்துதே யுளம் நோகு தென் செய்வேன்.
3. பல காலமு மலகை கருவிப் பல சோதனைப் படுத்தத் திரியுதே பயந் தருண்டு நிற்கிறேன்.
4. ஒரு நாழிகை யுகம் போலாகி யுண்மையே யென தாவி கலங்குதே யுயிர் போய் வருகுதே.
5. சின்னமாய்ப் பிறர் நகைக் கவிட்டது என்ன மாயமோ தெரிய வில்லையே என்றென் பிராண நாதனே.
6. ஐயோ மனதிரக்க மில்லையோ அடமாய் வருங் கொடிய தொல்லையோ ஆதரவு சொல்லையோ.
7. இரவோ பகல் பகலீரவதாய்த் திரிகாலமு முருகி நிற்கிறேன் எருசலையிற் தெய்வமே.
8. நெல்லையான் கவியுருக்க முருக்கம் நீயோ வென தாசைப் பெருக்கமே நின்றிரு விரக் கமே.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal