ஸ்தோத்திரம் துதி பாத்திரா
sthothiram thudhi paathiraa
ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை இன்றும் என்றும் துதித்திடுவேன்
காத்தீரே என்னைக் கருத்தாக வழுவாமல் என்னை உமக்காக எடுத்தீர் எனையும் உமக்காக -2 கொடுத்தீர் உமையும் எனக்காக
1. வல்ல வான ஞான வினோதா துதியே துதியே துதித்திடுவேன் -2 எல்லாக் குறையும் தீர்த்தீரே தொல்லை யாவும் தொலைத்தீரே -2 அல்லல் யாவும் அறுத்தீரே -2 அலையும் என்னையும் மீட்டீரே
2. நம்பினோரைக் காக்கும் தேவா துதியே துதியே துதித்திடுவேன் -2 அம்புவி யாவும் படைத்தீரே அம்பரா உந்தன் வாக்காலே -2 எம்பரா எல்லாம் ஈந்தீரே -2 நம்பினோர்க்குந்தன் தயவாலே
3. கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன் -2 அண்ணலே உந்தன் அருளாலே அடியாரைக் கண் பார்த்தீரே -2 மன்னா எமக்கும் நீர் தானே -2 எந்நாளும் எங்கள் துணை நீரே
4. தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன் -2 தேவனே நீர் உந்தன் சிறகாலே தினமும் மூடிக் காத்தீரே -2 தீதணுகாதும் மறைவினிலே -2 தேடியுமதடி தங்கிடுவேன்
5. அல்லேலூயா ஸ்தோத்திரமே துதியே துதியே துதித்திடுவேன் -2 அகில சிருஷ்டிகளும் துதிக்க அடிமை துதியாதிருப்பேனோ -2 அல்லும் பகலும் நித்தியமாய் -2 அன்பே உமையே துதித்திடுவேன்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C G C Am Em G C C G C G C C G F C F G C C G C Am Em G C C G C G C C G F C F G C C G C Am Em G C C G C G C C G F C F G C C G C Am Em G C C G C G C C G F C F G C C G C Am Em G C C G C G C C G F C F G C
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)