சோப்பு வாங்கினா சீப்பு இலவசம்
soppu vaanginaa seeppu ilavasam
சோப்பு வாங்கினா சீப்பு இலவசம் - இயேசு இரட்சிப்பு இலவசம் - இந்த சோப்பு வாங்கினா - பாவ மன்னிப்பு இலவசம் சோப்பு வாங்கினா சீப்பு இலவசம்
விலை கொடுத்து வாங்கும் சோப்பில் வாசனை இருக்கும் - சில உடம்புக்கு அது ஒத்துகாட்டி வியாதி உண்டாக்கும் இயேசு என்னும் சோப்பில் அற்புத வாசனை இருக்கும் - ஜனங்க பாவம் நீக்கி இரட்சிக்கின்ற வல்லமை இருக்க இயேசு என்னும் சோப்பை யூஸ் பண்ணுங்க பிசாசின் கிரியைகளை அழிக்கும் இந்த சோப்புங்க
இருதயத்திலே இருக்குதுங்க பலவகைப் பாவம் எத்தனை சோப்புத் தேய்ச்சுக் குளிச்சாலும் போகாது சாபம் நெஞ்சுக்குள்ளே இயேசுவை நீ கூட்பிட்டு பாரு நீசப்பாவமெல்லாம் ஓடி மறைஞ்சு ஒளிஞ்சிடும் பாரு இயேசுவைத்தான் நீங்க ருசித்து பாருங்க உங்க துக்கமெல்லாம் சந்தோஷமாய் மாறுங்க
அமெரிக்கா ரஷ்யாவிலே செய்ததுமில்லீங்க தென் ஆப்பிரிக்கா ஐரோப்பாவிலும் செய்ததுமிலீங்க ஆசியாவின் கண்டத்திலே பிறந்த சோப்புங்க - நம்ம இந்தியாவை இரட்சிக்க வந்த சோப்புங்க பரலோக முத்திரை போட்ட சோப்புங்க இயேசு இரத்தத்தாலே செய்து தந்த சோப்புங்க
இரட்சிப்பு வந்தா சந்தோஷம் இலவசம் - இயேசு இரட்சகர் வந்தா சமாதானம் இலவசம் வியாதிகள் வந்தா தெய்வீக சுகம் இலவசம் - கொடிய வேதனை வந்தா நமக்கு ஆறுதல் இலவசம் இயேசுவுக்குள் வல்லமை தான் இருக்குது - அவரை ஏற்றுக் கொண்டா வியாதி எல்லாம் பறக்குது
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar