சித்தமிரங்குவாய் நீயையா
sithamiranguvaay neeyaiyaa
சித்தமிரங்குவாய் நீயையா யெந் நாளுமுந்தன் சித்த மிரங்குவாய் நீயையா.
சித்தமிரங்கு வாயையா நித்திய செங்கோலின் கையா துத்தியஞ் செய்தேன் மேசையா கத்தனேயேசு நாதையா - சித்தம்
1. அத்தனார் தந்திருப்பாலா அடியர்களுன் பத்தர் பரிபாலனுகூலா சத்திய வேதாகம நூலா தாவீதுராஜ உத்தம யோக்கிய மனுவேலா சுத்த சுவிசேடத் தத்துவா முற்றொ ழிற்றிரித்தவ சத்துவா புத்திர பரம்பரைக்குக் கொத்தடிமை நானுமக்கு - சித்தம்
2. அர்ச்சய தேவாதி தேவே அனாதிகால உச்சிதப பிரமானந்த வாழ்வே நிச்சய வானத்தின் மன்னாவே நிதான சாலேம் சற்சன ஆ தீன கோவே மிச்சமாய் வீண் காலம் போனேன் துச்சலகை கைக் குள்ளானேன் பட்சமாய் எனைக் கண் பார்த்து இரட்சித்துக் கொள்வாய் தற்காத்து - சித்தம்
3. விந்தை சேர் மெஞ்ஞான சாஸ்திரனே வேதநாயகன் சந்தத சங்கீத கீர்த்தனனே சுந்தர இஸ்ரவேல் கோத்திரனே சுரர் சிறந்து வந்தனை புரிந்த தோத்திரனே தந்தையே யனாதி பிதா மைந்தனே யென் யேசுநாதா சிந்தை வைத்துத் தொழுதேனே எந்தவே ளையிலுந்தானே. - சித்தம்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal