சரணே மகத்துவ தேவா சரணா திந்தமே
saranae magathuva devaa saranaa thindhamae
சரணே மகத்துவ தேவா சரணா திந்தமே அருணோ தயப் பரம சீவா அருளானந்தமே
1.திருவாசகப்படி தேவா திபனார் மைந்தனே குரு சானதில் கொலை யானார் நரர் பாவங்களே
2. கரமே துளைத் திருப்பாணி இரு பாதங் களே சிரமேவு முண்முடி வாதை பர தாபங்களே
3. தலையான கள்ள னென்றாற்றிச் சதிக் காரர்க் குழாங் கொலை பாதகர்க் கிடையாகக் குரு சேற்றச் செய்தார்
4. எரிபோ லெரிந்து பொல்லாதார் எதி ராக்கிரம மாய்ப் பரிகாச நிந்தை சொன்னாரோ குருவே சையனே
5. அழியாத நித்திய சீவன் அருளாதித் தனே பழுதான தொன்று மிலாத பரனே அம்பரா
6. முழு லோகத்தின் பவந்தீர்க்க முதல்வா வந்தனம் பழி காரனைக் கதி சேர்த்த பரிவே தஞ்சமே
7. கள்ளனைக் கதி சேர்த்தையே கருணாம் பரமே பிள்ளை கணாங்க ளல்லவோ பிழையே பொறுப்பாய்
8. கொலைகாரர் கொடுத்தகாடி குடித்தானந்தமாய் தலை சாயத்துயிரை விட்டீரோ தயவே அம்பரா
9. சீவனைத் தந்த தெய்வமே திரியேக த்துவமே பாவியோ டொப்புர வாகும் பரமானந்தமே
10. உலகத் தினுயிர் வாழ்க உயிரே தந்தவா கலகத்தின் வலி நீக்கிக் கதி சேரும் பரா
11. குத்துண்ட இதயத் தெழும் இரத்த முந் தண்ணீருமே பத்தர் பவத்தை நீக்கவே பரிந்தாளையனே
12. அடைக் கலமைந்து காயம் அடியார் சொற்கமே படைக்கும் பகைக்குங் காப்பாய்பத தோத் திரமே
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal