சந்த தந்தாளிணை
sandha thandhaalinai
சந்த தந்தாளிணை துணைதான் தாதா அடியனை ஆதரி பரி
1.அந்தர வானொடு புவியுந்தரு காரணனே ஆதிப் பர வெளியே அருள் மிகும் சோதித் திரு வொளியே அடியேனலிந்தேன் மிடியால் மெலிந்தேன் உன தன்புற்று நோக்கியென் றுன்பத்தைத் தீர்த்தருளும் அற்புதமேவு பரப் பிரம தேவனே தாந்தாந் தக செந் தரிகிட தீம் தாந் திரி நாதிரிகிட தில்லானா தாந்தாம் தரிகிட தீம் திரு டெகு டகுச் செணு சுகிர்தத் ததிங் கண தோம் - சந்
2. புத்தியிலா தலைமிருகத்திலுங்கேடானேன் பூமியின் பாரத்திலே அழுந்திய காமவிகாரத்தினால் புலையே புரிந்தேன் நிலையே பிரிந்தேன் கன புண்ணியனே திருக் கண்ணோடு பார்த்துனின் புத்திரனுக்காயிந்த சத்துருவைக் காத்தருள்வாய்
3. அந்திபகல் அனுதினமுந்துயரமுறுதே அஞ்சல் செய்வாரிலையே அடையலர் வஞ்சகம் தீரலையே அகலா தலகை இகலேசெய்யுதே நிதம் ஆதரித்தன்புடன் பாதுகாத் தெந்தனை ஆண்டருளும் சுவாமி வேண்டிக்கொள்ளுகிறேன்
4. தஞ்சமுனாதர வருள் எஞ்சலிலாதசமு தாயமன்றாட்டவே நெல்லை வேத நாயகன் பாட்டாவே தருவாய்திடனே வருவாய் உடனே வந்து தப்பாமற் காத்தருளும் இப்போதும் எப்போதும் சங்கீர்த்தனம் வந்தனம் கிறிஸ்தேசுவே.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal