சாமி நின்னடி தந்து
saami ninnadi thandhu
சாமி நின்னடி தந்து நேமி கிறிஸ் தேசுநாத சாமி நின்னடி தந்துநேமி
பூமிதனில் வந்த அபிர கா மூதவி தாதிமைந்த - சாமி
1.ஆதியந்த மிலாவனாதி அளவில்லாத நீதி நிறைந்த பரஞ்சோதி நிகரொன்றில்லா வேதமந்திர கியானமோதி வெளிச்சமாக சாதியெலார்க்கு மோட்சவீதி தனையே காட்ட மாது விற்றினில் மோன மனுட குமாரனான
2. தானாயிருந்த வொரு சத்தம் சருவலோக கோனான தேவ திருச்சித்தம் குறைகளன்றி வானூடெழுந்த பரிசுத்தம் மனுடருக்குப் பரனாய் விளங்கும் வாக்குத்தத்தம் பராபரனின் ஞானாகமத் தொருத்துவம் ஆனாலும் மெத்த மகத்துவம்
3. சம்மனசுக்கள் நலசங்கம் சதாபதிதன் செம்மலைக்கொண் டாடினது துங்கம் திரியேகவஸ்து மும்முத லொன்றா யெழுந்த புங்கம் முன்னாள் வனத்தில் விம்மிய பிசாசை வென்ற சிங்கம் மேசையா நீயே யெம்மிறைய பரஞ்சித் தங்கம் துன்மனசா லென்ன வில்லங்கம்
4. இன்றைக் கழியும் லோக வாழ்வு இதைநிசமென் றொன்றித் திரிவதே யென் தாழ்வு உறுதியற்றுய் கன்றிமயங்கும் மனநோவு மயக்கமற்றுப் பொன்றத் தயவோ டென்னை யேவு புண்ணியமையா வென்றிக் கருணைத்தூவு என்றைக்கும் நீ என்றேவு
5. ஆதமேவை செய்த தாறுமாறு அகிலத்துற்ற சாதிகட்கு வந்ததே யவதூறு தவீதுபோற்றும் யூதாவின் கோத்திரச் சிங்கேறு ஒருத்தராலே தீதனைத்தும் பொடித்த நீறு தேவசகாய வேதநாயகன் பாவைக் கூறுவே னெனக்கருள் மோட்ச பேறு
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal