ராரராரா ரோ ரார ராரா ரோ
raararaaraa ro raara raaraa ro
ராரராரா ரோ ரார ராரா ரோ ரார ராரா ரோ ராராதிபாலா ராரராராரோ.
1.சீரினாதிபனே பேரிலாதவனே தேவ சோதியதான திரித்துவா திவிய பாலகனே.
2. வாரும் வாரும் நின்கண் பாரும் பாரும் கிருபை கூறும் கூறும் கிருஸ்தேசுமன்னா காரும் ஓசியன்னா.
3. காவிலேயமைவாம் பாவ மாறிடவே ஆவலாய்மனு வாகப் பிறந்தவா ஆதியான் சுதனே.
4. முந்து மாதியினால் வந்த சாபமுமே சிந்தியே அழிவாக எழுந்தவா தேவ தேசிகனே.
5. வேத மாமறை யூடோதும் வாசகமே போதமாய் நிறைவேற்றப் பிறந்தவா பூலோகரட்சகனே.
6. மாறில்லாதவனே பேறு தாரவனே ஈறில்லாத தயாப சருவேசா ஏசுநாயகனே.
7. சத்தியத்துருவே நித்தியத் தொளிவே பத்து லட்சணமுள்ள சொரூபா பாவ நாசனனே.
8. ராச மாளிகைமேல் ஆசைதானில்லையோ நீச மாட்டகமானது வந்ததோ நேயதற்பரனே.
9. ஆனயாவையுமா ஞானமாகவுவே ஈன மேயணுகா மலுண்டாக்கும் நீ ஏழையோபரனே.
10. தேசுலாவிய மாரோஜ மாமலரே தூசுதானிலை யோகுளிர் மெத்தவோ ஜோதியான் மகனே.
11. எல்லை ஏதுமில்லா வல்லமைபரனே புல்லின் மேவப் பொறுத்தனையோ சுவிசேடபோதகனே.
12. ஞாலரும் பரம் வாழ் சீலருந்தொழவே பாலருந்திய ழுதனையோ நரர் பாவமோ பரனே.
13. விண்ணின் மீதினிலே எண்ணமாகவுமே அண்ணலோடுயர் பொன்முடி சூட்டுதற்கான வேடமிதோ.
14. விள்ளுதற் கெமையே வள்ளலெம் முதலோன் பிள்ளையாக்க மனு மகனாகிய பிள்ளையே ஐயனே.
15. மாசில்லா மரியாள் சூசையார் தொழவே நேசமாயுருவான அரூபா நீதியாதிபனே.
16. நீதரானவதி தூதர் பாடு முனை வேதநாயகன் பாடவு வந்தையோ வேதநாயகனே.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal