போய்வாறேன் பிள்ளைகளே
poyvaaren pillaigalae
போய்வாறேன் பிள்ளைகளே நானும்மை விட்டு
1.போய் வாறேனா னும்மைவிட்டுப் புன்மரத்தில் பாடுபட்டு மாய் வாய்ச் செந்நீர் சொரிந்திட்டு மாண் டெந்தை தலத்துட் பட்டு - போய்
2. சீடர்களே நாமன்பாகச் - சேர்ந்திருந்தோமே சிநேக மோடு விடை தாரும் போக மோட்சத்திற்கு நானேக - போய்
3. கொஞ்ச நேரம் உங்களோடு கூட இருக்கின்றேன் பாடு மிஞ்ச நீங்க ளென்னைத் தேடு வீர்கள் முஸ்திப்பாக்க வீடு - போய்
4. நானன்பாயிருந்தாப் போலே நட் பொருதர் ஒர்தர் மேலே மேன்மையாய் நீர் வைப்பதாலே மெய்ச் சீஷராவீர் மென் மேலே - போய்
5. அப்போஸ்தலரே நீர் வெம்பி அஞ்ச வேண்டாம் என்னை நம்பி இப்போ திருங்கள் விசும்பில் ஏற்றுக் கொள்ளுவேன் திரும்பி - போய்
6. பேதுருவே பேய்கனன்று பேச வேண்டினே னுழன்று பேதலிப் பாய் என்னை இன்று பின் செலாய் பின் செல்லாய் யின்று - போய்
7. மாது பெரும் போது துக்க மாவாள் சேய் பெற்றால் முழுக்க வாதை மறப்பாள் நீர் மிக்க மனங்கலங்க வேண்டாம் நிற்க - போய்
8. நீங்களேங்கித் துக்கிப்பீர்கள் நேமியோர் சந்தோஷிப்பார்கள் நீங்கவே மகிழ்வாம் சூர்கள் நித்தம் சுபமாய் வாழ்வீர்கள் - போய்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal