போற்றி புகழ்ந்திடுவோம்
potri pugazhndhiduvom
போற்றி புகழ்ந்திடுவோம் அல்லேலூயா- துதி சாற்றி மகிழ்ந்திடுவோம் அல்லேலூயா கடந்திட்ட காலமெல்லாம் கண்ணின் மணியை போல காத்தாரே தேவன் நம்மை அல்லேலூயா தினம்
1.பாவத்தை போக்கினாரே அல்லேலூயா - நம் கோபத்தை மாற்றினாரே அல்லேலூயா சாபத்தினாலுண்டான ரோகத்தை மாற்றியவர் சோகத்தை தீர்த்ததாலே அல்லேலூயா - தினம்
2.தாய் உன்னை மறந்தாலும் அல்லேலூயா - தன் சேயைப்போல் காத்திடுவார் அல்லேலூயா தன் நேயன் நம் இயேசு கிறிஸ்து தாயினுமேலவராய் தூயவரம் அளித்தார் அல்லேலூயா - தினம்
3. சோதனை காலத்திலே அல்லேலூயா - நம் வேதனை பட்டிட்டாலும் அல்லேலூயா நாதன் நம் இயேசுகிறிஸ்து வேதம் நமக்கிருக்க சேதம் ஒன்றும் வராது அல்லேலூயா - தினம்
4.பயங்கர புயல் உன்மேல் அல்லேலூயா - வெகு விரைவாக வீசினாலும் அல்லேலூயா கப்பலில் உள்ள கிறிஸ்து கரங்கொண்டு காத்திடுவார் தட்டி எழுப்பிடுவார் அல்லேலூயா - தினம்
5.பூமி முழுவதிலும் அல்லேலூயா - உன்னை சாட்சியாய் வைத்திடுவார் அல்லேலூயா மறுதலித்தாலும் நீ தான் மனங்கசந்தழுதுமே அருகில் வந்தால் அணைப்பார் அல்லேலூயா
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal