போகாதே என்பரா
pogaadhae enbaraa
போகாதே என்பரா எனைப் பிரிந்து போகாதே என்பரா தருணம்விட்டு.
பாகா யுருகினேனேகா சரண்வியா பகனெ கிருபைமுகனே யேசு நாயகனே சமையம் விட்டு. - போகா
1. ஆதி பராபரனின் வார்த்தையே யுல கனைத்தின் பவத்தையெல்லாந் தீர்த்தையே வேத மறையிலென்னைச் சேர்த்தையே யென் மேலே பரராலே மலைபோல பகைவருது. - போகா
2. ஐந்து காயத்துயர்ப் பட்டாயுன தடிமை யென்றனைக் கரந் தொட்டாய் தந்தை யுனதுயிரும் விட்டாய் சரண் டஞ்சம் பிரபஞ்சம் கனவஞ்சம் பரதவித்தேன். - போகா
3. அல்லும் பகலுமாயை கொல்லுதே நர கலகை தந்திரத்தினால் வெல்லுதே வல்லவுலகம் பழிசொல்லுதே யேகோ வாவே நரர்வாழ்வே ஒரு தேவே யுனக்குப் புண்ணியம் - போகா
4. பற்றி யெங்கனம் கரையேறுவேன் எனின் பரதாபத்தையினி யென்றாறுவேன் சற்றுங் கவலையற்றுத் தேறுவேன் சீம சோனே தவிது கோனே கிருபையோனே யுனைக் கும்பிட்டேன் .- போகா
5. கன்மவினையின் நினைவோடுது பல கவலை மிகுந்து மனம் வாடுது தன்மக் குருவுனைக் கண்டேடுது வுந்தன் சரண மெந்தன் மரணம் நான்கு கரணமயங்கும்போது. - போகா
6. ஐயாவுனக்குச் சொந்த வடிமை யென்றன் அவதி பவத்தால் வந்த கொடுமை மெய்யாய்த் தவிரெனது மிடிமை சத்திய வேதா யேசுநாதாவுந்தன் பாதாம்புயம் பிடித்தேன். - போகா
7. நன்மை மிகும் பரமசீரா வேத நாயகன் றமிழ்க்கு பகாரா வன்மைப் பர தேவகுமாரா கிருபை வைத்துக் கரிசித்துவராய் சத்திய கிறிஸ்துவே நீ. - போகா
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal