பிறந்தும் வியர்த்தமாச்சே
pirandhum viyarthamaacche
பிறந்தும் வியர்த்தமாச்சே புவியிற் சென்ம மிறந்தும் வருத்த மாச்சே
1. சிறந்த சத்திய வேத மறிந்தும் நரக வழி திறந்து பரா பரனை மறந்து திரியுஞ் சென்மம்
2. கருத்தருரைத்த பத்துக் கற்பினைகளை மீறி மெத்தக் கெறுவங் கொண்டு விழுந்து கிடக்குஞ் சென்மம்
3. உலகம் படைத்த கர்த்த னொருவனெனச் சொலியும் பல பல தேவர்களைப் பணிந்து திரியுஞ் சென்மம்
4. வானத்தின் சேனைகளை மண்ணிலுள்ள வஸ்துக்களை யீனப் பசாசுகளை யேற்றி வணங்குஞ் சென்மம்
5. ஆணை சத்தியங்கள் பண்ணி யச்சயன் தேவ நாமத்தை வேண விதங்களாக வீணில் வழங்கும் சென்மம்
6. கருத்தரி னோய்வு நாளைப் பரிசுத்தம் பண்ணாமல் விருத்த மாக்கிப் பல வேலைகள் செய்யுஞ் சென்மம்
7. தகப்பனை மாதாவைச் சங்கித்து வாழ் காம லகத்திற் கெறுவங் கொண் அசட்டை செய்யுஞ் சென்மம்
8. உலைய மனுடரி னுதிரஞ்சிந்தப் படக் கொலை செய்யும் பொல்லாத கொடும் பாதக சென்மம்
9. அப காரத்திலய லான் மனையைத் தழுவும் விபசாரத்தினத்தின் வேசித்தனச் சென்மம்
10. உளவு செய்து பிற ருடைமைகளைத் திருடிக் களவு செய்யும் பொல்லாக் கடை கெட்ட பாவச் சென்மம்
11. மெய்ச் சாட்சிகள் சொல்ல வேண்டும் பிறனுக் கெதிர்ப் பொய்ச் சாட்சிகள் சொல்லிப் பொரியும் புலையர் சென்மம்
12. தடுத்துத் தடுத்து மறை சாற்றியென சொலியும் அடுத்தவன் வீட்டை யிச்சித் தலையுங் கொடிய சென்மம்
13. அயல் மனை சேடன் சேடி எருது கழுதை மற்று மயல் பிடித்திச் சித்து மயங்கித் திரியுஞ் சென்மம்
14. எல்லாத்திலுங் கதிக்க எந்தை பராபரனை நல்லாய்ச் சிநேகியாத பொல்லாத வீண் சென்மம்
15. தன்னைப் போற்றன் பிறனைத் தக்கபடி நேசியாமற் பின்ன பேதகஞ் செய்து வின்னமாய்ப் பேசுஞ் சென்மம்
16. நெல்லை வேதநாயகன் நித்திய சங்கீர்த்தனஞ் சொல்லி பராபரனைத் தொழுது கொள்ளாத சென்மம்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal