பரஞ்சோதி வந்தாரே
paranjodhi vandhaarae
பரஞ்சோதி வந்தாரே நரன்றன்றன்மை. பெருங் கொடும் பவத்தால் வரந்தருங் கிறிஸ்துப் பெத்தலேகேமினிற் பிறந்தாரே நரன்றன் றன்மை.
1.மோக்கிடப் பத்தா தீக்கிடக் கத்தா முந்தின சேயர் பிறந்தாரே மோசகால கூளிகள் வினைநீக்கி நிதஞ் சுகமே தந்தாரே.
2. கனிவினையடமே யனைமரியிடமே கடவுளர் வந்து பிறந்தாரே காதை வேத புராதன நாதன் சுபவிசேடந்தந்தாரே யனந்தந்தன்மை.
3. இத்தனை தயவாய் நித்திய பரனா ரோனாசாரி பிறந்தாரே யேசுராச குருபரனர மூர்த்தி ஆசீர்வாதந் தந்தாரே யனந்தந்தன்மை.
4. நல்கு நீதி மெல்கி சேதேக் கேயா சாரி பிறந்தாரே நாத வேத சங்கீத சுவாமி மோட்சானந்தந் தந்தாரே யனந்தந்தன்மை.
5. தேவ குமாரன் சீவ சொருபன் தாவீது ராசன் பிறந்தாரே தாழ்விலாத சம்பத்துகளாக்கி நித்திய ஜீவன் தந்தாரே யனந்தந்தன்மை.
6. சிங்காரப் பெட்டி வங்காரக் கட்டி தேவாட்டுக்குட்டி பிறந்தாரே சீவனாதி பிதாவொரு மைந்தன் பரமண்டலமே தந்தாரே யனந்தந்தன்மை.
7. நெல்வேலிமேவு சொல்வேதநாய கன்பாவென்று பிறந்தாரே நீடுகோடி பாதகவினை நீக்கி ஞான போசனந்தந்தாரே யனந்தந்தன்மை.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal