பரனைப்பணிவதுவே பாக்யம்
paranaippanivadhuvae paakyam
பரனைப்பணிவதுவே பாக்யம் நித்யம் பாவிகளுக் கெல்லா மனோக்கியம் ஆரோக்கியம்
1.கருணைப் பரம வான காட்சி யனந்த ஞான பெருமைப் பொருள் நிதான பேறுதரு மொன்றான.
2. அன்பு தரும் சிநேக ஆற்றும மகிழ் விவாக இன்ப மிகுந் தெய்வீக ஏகத்துவ திரியேக.
3. நித்ய மகத்துவதீத நீதிக்கள வில்லாத சத்ய கிறிஸ்துநாத சமஸ்த நன்மை பிரசாத.
4. வானம் புவி படைத்த வையத்திருள் துடைத்த ஞான நன்மை யுடைத்த நரர்க்குக் கிருபை கிடைத்த.
5. ஈறில்லானைக் கோனை எட்டுக் குணமுள் ளோனை மாறில்லா தன்பானை மாந்தர்க்கென வந்தானை.
6. தந்தை இரங்கி தந்த சாதிக்கருள் சிறந்த மைந்தனெனப் பிறந்த மகத்துவப் பரமானந்த.
7. மாசில்லாப் பிரகாச மகிமைத் திருவிலாச நேசமிகும் சர்வேச நித்ய கிறிஸ்துராச.
8. வெற்றி மிகும் கொண்டாட்டு வேத நாயகன் பாட்டு முற்று மகிழ்ந்து கேட்டு மோட்சம் தரும விண்ணாட்டு.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal