பரம நாயகர் கருணையாக
parama naayagar karunaiyaaga
பரம நாயகர் கருணையாக இப் பாரில் வந்தாரிதோ பாரும்-இவர் பத்தா யேசு கிறிஸ்தான மொரு கர்த்தா வென்றடி சேரும்
சுரர்கள் சேனைகள் - 5 அருமையாய்த் தொழும் பெருமையின் சருவேசன் கன நேசன் கிருபை வாசன் இயேசு ராசாதி ராசன்.
1.விண்டல்லோ இவராசன் மறை இரண்டல்லோ தரும் வேதம் வேலல்லோ பெயர் சீயோன் குமாரிக்கு மாலல்லோ திருப்பாதம் கற் கண்டல்லோ மொழி தாவி தேந்திரன் பண்டல்லோ சொன்ன கீதம் காத லான பாவிகளுக் கெல்லாம் போதரவான பிரசாதம் காயாமல் திரு வுளம் காயாமல் அற நெறி சாயாமல் நரர்குலம் மாயா மலருளோயாமற் பெய்ய
2. தந்தை யனாதி பிதாவுக் கோரே யொரு சொந்தமான குமாரன் கன சல்லா பத்தன வுல்லாசத் துரை யெல்லாத்துக் கதிகாரன் முந்தின மாந்தர் நிற்பந்த மெலாமறச் சுந்தர மேவிய தீரன் அந்த முற் பிதாக்களெல்லா முற்பனமாய்ச் சொன்ன நற் பரம வுபகாரன் முத்தாமே சீவரத்தின முத்தாமே இஸ்திரியுட வித்தாமே வேத கற்பனைப் பத்தாமே நம் சம்பத்தாமே யோவா
3. நல்லோராகிலும் பொல்லா தோராகிலும் எல்லாருமாய் வந்து கூடும் - பல நாட்டுச் சனங்களும் கூட்டங்களாய் வந்து ஞானப் பாட்டுகளைப் பாடும் கல்லா மனத்தையு மில்லாத் தனத்தையுஞ் சொல்லாமலே விட்டுப் போடும்-மெத்த காத்திரமாய் வேத சாஸ்திரி நாட்டிய தோத்திரங்களையுங் கொண்டாடுங் காட்டாரே பிரபஞ்சக் காட்டாரே உங்கள் செபம் கேட்டாரே தள்ளிப்போட மாட்டாரே யுமை மீட்டாரே யோவா.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal