பரலோக நாடெந்தன் இன்பநாடதில்
paraloga naadendhan inbanaadadhil
பரலோக நாடெந்தன் இன்பநாடதில் பரிசுத்தர் கூட்டத்தில் சேர்ந்திடுவேன் - பரமானந்த கீதம் பாடிடுவேன் அங்கே
பரிசுத்தர் ஒளியின் பவனியில் புகுவேன் பரமனைத் துதித்து பயணத்தை முடிப்பேன் பாரங்கள் யாவும் நீக்கி, பக்தியாய் நித்தியரோடிருப்பேன்
இயேசுவே இங்கென் சம்பத்து என்றேன் ஈலோக இன்பம் குப்பை என்றெண்ணினேன் இயேசுவில் மகிழ்ந்திடுவேன், அந்நாட்டில் என்றென்றும் வாழ்ந்திடுவேன்
வானம் முழங்க புவி அதிசயிக்க வருவார் இயேசு வானசேனையுடன் வாடாமுடி சூடுவார் என்னோடு நீடுழி வாழ்ந்திடுவார்
மரணமாம் யோர்தானை மகிமையாய் கடப்பேன் மகிபனின் வருகை இருப்பினும் சந்திப்பேன் மங்களம் பாடிடுவேன், இயேசுவில் மகிழ்ந்து வாழ்ந்திடுவேன்
அழுகை கூக்குரல் அங்கே இல்லை அடக்க ஆராதனையும் கிடையாது ஆண்டவரில் மகிழ்ந்து அல்லேலூயா அனுதினம் பாடிடுவேன்
இயேசுவின் ரூபம், என் பிரியம் தானே இயேசுவை சேர என் உள்ளம் பொங்குதே இயேசுவின் ஒளிக்காணுதே என் கண்கள் இயேசுவை வரவேற்குதே
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal