பராமுகந்தானோ இன்னம்
paraamugandhaano innam
பராமுகந்தானோ இன்னம் பரா முகந்தானோ
தராதரப் பிரதானி யேசு தயாபரக் கிருபை ஞானி. - பரா
1. பத்தர் வினைக் கொரு முடிவே பரி சுத்தசனத் திருவடி வே திருவடியர் கடொழும் வஸ்துவே கன திட தவிதுட குலக் கிறிஸ்துவே. - இன்னம்- பரா
2. பராபரத் தோத்திரா பரம சற்பாத்திரா இராச சொற்சாத்திரா விச றாவேலர் கோத்திரா- இன்னம்- பரா
3. அனாதி தன்மைந்தா வருள் சதானந்தா பொனாடெழுந்தா புக லாய்ச் சரணந்தா - இன்னம்- பரா
4. பவந்தனைத் தீரும் பரிந்தினம் வாரு முவந் தெனைச் சேரு முல கந்தனிற் காரும் - இன்னம்- பரா 5. பாக்கியஞ் செய்யே பராபரன் கையே ஆக்கையும் பொய்யே விடாதருள் பெய்யே - இன்னம்- பரா
6. ஏதிதிப் போதோ வித்தனை தீதோ வாதுனக் கீதோ மாற்ற வொண்ணாதோ - இன்னம்- பரா
7. வலமையின் கோவே வான மனாவே நல மிகுந் தேவே வேத நாயகன் பாவே. - இன்னம்- பரா
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal