பர சொரூப மே தேவ
para sorooba mae deva
பர சொரூப மே தேவ பதி மனுவேல் திருவடிவு. திருப்புகழ் மேவிய சுந்தர திரித்து வகாரண விந்தைய ரொருத்தருங்காணாத் தந்தைய ரொன்றதா முரிமையின் மைந்தா.
1.அதமெவை பாதக வடமே அறவொருமா மரியிடமே சுதனென மேவிய திடமே சுரர் தொழு தாடின நடமே சித ஞானாதி சயமே தேவாதி பதி நயமே இத முறு நித்திய ஜீவ இயேசுராஜ மெய்த்தேவ.
2. அளவிலடங்காத் திரமே அட்சயப் பரா பரமே உளமகிழ் ஞானாகரமே உன்னதத்தரா தரமே விளம்பரிய கரிசனமே மேலான தெரிசனமே வளமிகுங் கிருபை கூரையா மானுவேலேசு மேசையா
3. அரிய கிருபை யினுடைய அதிபதியே சரணெனையாள் பெரிய வலமையின் மகிமைப் பிரதாபி சரணெனையாள் ஒருவருக்கு மெட்டாத உன்னதனே சரணெனை யாள் திருநெல்லையான் கவி நேச திவ்விய யேசு மகராஜ.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal