பாவியெனைச் சற்றே
paaviyenais satre
பாவியெனைச் சற்றே கண்பாருஞ் சுவாமி
தேவ திருப்பாலனான சீவனின் மன்னாவே சிந்தை விசாலா மனோலா குணாலா தேசுலாவு திவிய நேசா யேசு சருவேசா பாவி
1.இந்த லோக வாழ்வை நாடி என்தன் மனம் வாடுதே தந்திரப் பிசாசதும் நிற் பந்தமுறச் சாடுதே இடுக்கண் மிகுதுயர் படுத்து தெனையே திடத்த உனதுயிர் விடுத்த திலையோ
2. பெந்தினந் திரண்டுக் கூடிக் கொந்தளித்துப் பேசுதே அந்தியுஞ் சந்தியுமாக நிந்தனை செய் தேசுதே பினுமுடலட மொடெனொடு சமரிடுதே நினைவு தவறிடவு மனது பதறுதே
3. பத்துரை மறுத்துப் பேயின் எத்தினிற் போனேனே குத்திரத் துரோகத்தினாற் சத்துரு வானேனே பதைக்க மனமது கொதிக்கு துலகொடு கதிக்க வலகையும் வதைக்குதய்யோ
4. அங்குனின் பாடு கள்நல்லோர் தங்களுக்குப் பேறோ செங்குருதி பாவிகளின் பங்கதல்லால் வேறோ ஆவிது தன்மமல்ல தீவினை வளருதே தேவரீ ரடி மையை மீழ்வது கடனே
5. வேதநாயகத்தின் பாடல் மேவு சருவேசனே பாதகர் பாவமெல்லாம் நீவு மேசுநாதனே மெத்த அடிமை துயருற்று மெலிகுவனோ சற்று முனது திருச் சித்தமுருகலையோ
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal