பாராய் பாராய்
paaraay paaraay
பாராய் பாராய் பாராய் பாராய் பாக்கிய சீயோனின் கண்ணே
சீராக வேயிதோ நேராய் பரத்தினின்று சீவ நதிப் பிரவாக மேவு துன்னதமாக
1. ஆதி யானுமாட்டுக் குட்டியுமே தங்கும் ஆசனத் திருந்து வீசும் பளிங்கைப் போலே தேசு துலங்க வருஞ் சுத்த சீவ தண்ணீரின் சித்ர நதியது தா னுத்தமியே கண்ணாலே
2. வீதி நடுவிலேயும் நதியினிரு கரையும் விந்தையாகப் பனிரண்டு விதக் கனிகள் மாதந்தோறும் தந்து சாதிகளுக் காரோக்கியம் வருத்தும் பத்திரத்தைக் கொண்டு இருத்துஞ் சீவ விருட்சம்
3. நதியினோரத் தினக் கரையு மிக் கரையினும் நன்று மினிதுமாக நின்று போசனத்துக் கிதமுங் கனிகளோ யா திலைகளு திராதென்று மிருக்குஞ் சகல விதத் தருக் களனந் தனந்தம்
4. வானத்திருந் திறங்கிப் பரமன் மகிமை கொண்ட மகத்துவமான பரி சுத்த யேருசலே மேன்மைப் பட்டண முற்றும் பளிங்குனொளிவு தோன்ற வெளிச்சம் யஸ் பிக் கற் போல் பளிச் சென் றொளிர்து சாலேம்
5. பெரிது முயரமான மதிளு மாறி ரண்டு பெரிய வாசல் கண் மேற் சுரர்கள் பன்னிருவருக் குரிய இசறாவேற் பன்னிருவர் கோத்திரத்துக் குடைய பெயர் பதித்த கடவுள் திருநகரம்
6. நாலு திக்குகனான மூன்று வாசன்க ரத்தின் மதிட் பனிரண்டஸ்தி வாரங்களு மேலு மாட்டுக் குட்டியின்ற னாறிரண்டு வேதப் போஸ்தலர் நாமம் தீதப் பிரஸ் தாபங்களும்.
7. உன்னதச் சதுரமான பட்டணத்தின் உயரமகலம் நீளஞ் சரிசமான தூரம் பன்னீராயிர மிஸ் தாதி றூற்றுநாற் பத்து நான்கு முழஞ் சித்திர மதிளுயரம்.
8. சுத்தக் கண்ணாடிக் கொக்குஞ் சுத்தப் பசும் பொன்னாகத் துலங்கும் பட்டண மதிளிலங்குங் கட்டுதல் யஸ்பி அஸ்தி வாரங்களோ சகல வித ரத்தனங்க ளாலு மலங்கரித்த கோல விசித்திரங்கள்.
9. ஆதி யஸ்பி நீலக்கல்லே கலக தோனி அதின் பின்னாக மரகதங் கோமேதகங் கெம்பு மாதே கிரி சொலித்து பேரில் புஷியராகம் வயிடூரியம் பத்ம ராகம் மேதிஸ்து.
10. ஆறிரண்டு வாசலொவ் வொன் றொரு முத்தான அரிய பட்டண வீதி தெரிதற் கன்ணாடிபோன்ற சோதிப் பொன்னே யதிற் தேவாலய மில்லைச் சூரிய சந்திரனில்லை ஆரியனின் மகிமை.
11. ஆட்டுக் குட்டியதின் தீபமேதிரித்துவ ஆதியான் மகிமை வெளிச்சமே யதற்குள்ப் பாட்டுத் திறத்து வேதநாயகனுந் தவீதும் படித்துப் பரம சேனை நடித் தெக் களிப்பதையும்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal