பாரா யேசு மெய்
paaraa yesu mey
பாரா யேசு மெய் கோனே யுனின் பாதத்தை நாடி வந்தேனே
வீராயதி காலை பூரணனேயுந்தன் விந்தையு யிர்த்தலைச் சந்திக்கவே வந்த நேரான பாவி யென் பாரா நிர்ப்பந்த நீங்கிடவே ஈங்குடனே பாங்கடைய கண்கொண்டு - பாரா
1.தாயட வாயெனைத் தாங்க இந்தத் தாரணி யோர்க்கருளோங்க மிக்க நேயமாய் நின்னுயிர் நீங்க நெஷ் டூரப் பிசாசு பின் வாங்க ஞாயறு வாரத்தெழுந்த சீமானே நம்பிக்கையாய்ப் பதம் வந்தனம் நானே மாயப் பிசாசை வென்ற சிமசோனே மட்டடங்கா துட்டர் வினை விட்டகல இட்டமுடன் - பாரா
2. அண்ட மதிர்ந்திடக் குதிக்கத் தூதர் அஞ்சலி செய்துனைத்து திக்க மண்டலத் தோர்க்கருளுதிக்க மகத லாமரியாட் குரை விதிக்க எண்டிசையு மடங்கானே யிப்பூமி எப்படித் தாங்குங் கிறிஸ்தேசு சாமி தொண்டரை யாட் கொண்டடிமை கொணேமி சுத்த பரிசுத்தாங்க நித்தியனேயித் தருணம் - பாரா
3. கத்தனே நின்னுயிர்விடுத்து மலைக் கல்லறைக்குட் புகப்படுத்து இத்தனையா யெனையடுத்து நயந் தேயுன் றிருக்காட்சி கொடுத்து சித்தம் வைத்துந் தனடியான் தேவ சிகாமணியுன் பதஞ் சேவித்துச் சீவ னுற்றுயிர் வாழ்க நற்பதமேவ உச்சிதமாய் நிச்சயமாய்ப் பட்ச முடனிச் சணமே - பாரா
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal