பாடிப் புகழ் சொலவே பதம்
paadip pugazh solavae padham
பாடிப் புகழ் சொலவே பதம் நாடி மகிழ் கொளவே பட்ச மிச்ச இரட்சகனேசுவை பாடிப் புகழ் சொலவே.
கூடி யிசைவாக அருகோடி நிசமாக கோதை மேதை வதை சிதைய வே - பாடி
1.தலையே நீ வணங்காய் தலை முண்முடி வாதையினால் தலையாம் துற்பவம் போக்கும் தலைவனை தலையே நீ வணங்காய் - பாடி
2. கண்காள் காணீர்களோ - கண்ணால் பேதுருவைக் கனிந்து கண்மணிபோல் கண் காணித்த கண்ணணை கண்காள் காணீர்களோ - பாடி
3. செவிகாள் கேளீர்களோ செபித் தேற்றும் அருள் வோமெனும் சிவஞான நித்திய சீவ வசனத்தை செவிகாள் கேளீர்களோ - பாடி
4. மூக்கே நன்மணமே ஈசாக்கு ஏசா அறிநேர் முக்காலத் தபிஷேக மதலையாள் மூக்கே நன் மணமே - பாடி
5. வாயே வாழ்த்துரையே மனவாக்குணர் மெய் நினைவால் மாயா மெய்க் கிறிஸ்தாயனை வாய்மையாய் வாயே வாழ்த்துரையே - பாடி
6. தோளில் சிலுவை தொட்டார் நம் தோள் சுமை நீக்கிவிட்டார் தோழனாகத் தோன்றலுமானார் தோளில் சிலுவைத் தொட்டார் - பாடி
7. கரனேரேறெடு மேகரும் பேய்வல் வினைதணிய கரங்கால் ஆணிகடாவச் சகித்தோனை கரனேரேறெடுமே - பாடி
8. முழங்கால் படியிரோ முனங் காவிலிறைஞ் சினனை முணங்கா முழங்கா முனங்கா வெனவே முழங்கால் படியிரோ - பாடி
9. உள்ள முருகிரோ குருசில் உள்ள நம் வள்ளலுக்கே உள்ளதுள்ள துன்னதன் உண்மையே உள்ள முருகிரோ - பாடி
10. தெண்டனிட்டே தொழுவீர் நரக தெண்டனைக் கேனழுவீர் தெண்டமு முண்டோ தொண்டருக் கென்றென்றும் தெண்டனிட்டே தொழுவீர் - பாடி
11. தேகமும் ஆவியுமே திரியேகனைத் தாவியுமே சினேகமாயலோக அநேக சீர் சொல் லெலியாவுமே - பாடி
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal