ஓசனா வனந்தா ஓசதானந்தா
osanaa vanandhaa osadhaanandhaa
ஓசனா வனந்தா ஓசதானந்தா ஓசனா தாவீதின் மைந்தா உந்தன் விந்தைப் பாதந்தா
1.யேசுக்கிறிஸ் தெந்தா யெந்தனையு கந்தாய் மாசறப்பிறந்தாய் மாட்டகத் தெழுந்தாய் வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனமே.
சரிகம பாப்பா தானிசானித பாபக மதமரி கபகச ரீமரினிசா சசா பாபப்ப மா மம்ம காகக்க காரி.
2. மனுடவதாரா மானிட குமாரா கனி மரியாட ருகணே நசரை யூரா காரா சற்காரா கற்பக சிங்காரா.
3. பரம சுதாகரா பரநரகுணாகரா தருணந்தருணமென் மேற்றயை செய்கி ருபாகரா தராதர சராசர தயாபர சரீரா.
4. திரு மறை வாசனா திவ்விய கிருபாசனா ஒரு ஞான போசனா உயர் பவ நாசனா ஓசன்னா மன்னா மன்னா உன்னத உன்னதனா
5. துய்ய துய்ய மெய்யா சுத்த விருதையா உய்யுமொரு மையா ஒளிர் திருக்கையா ஓசையாவும் மேசையாவும் யேசையாவும் நீயே.
6. தேசுறு மெய்த் தேவே சிங்காரப் பூங்காவே மாசிலாத மெய் வாழ்வே வானவர்கள் கோவே மாசீவா தேவா வாசேயோவாவே.
7. சொல்லாயர் பாவே துய்ய ரோசாப்பூவே அல்லாவினாவே அன்பர்கள வாவே அல்பாவே ஓமேகாவே அல்லேலூயாவே.
8. வேதநாயகன் பாட்டா விண்ணவர் கொண்டாட்டா சீத விற்பனர் கூட்டா தேவ அற்செய சீட்டா சேட்டா நன்னாட்டா வென்றேட்டா மன்றாட்டா.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal