ஓ இஸ்திரி வித்தேசையா
o isthiri vithesaiyaa
ஓ இஸ்திரி வித்தேசையா அன்பு கூராய் துன்பந்தீராயோ. வஸ்தொரே கிறிஸ்து வேதா மானுவேலே யேசுநாதா வந்தெமைக் கிருபைக் கண்பாராயோ.
1. ஆதி மானிடர் புரிந்த பாதகந் தொலைக்க வந்த அண்ணலே யுமக்கபையமே ஓ இஸ்திரி வித்தேசையா ஆதரித் திரங்க வேண்டுமே.
2. சத்துருச் சோதனை போலே மெத்தவுங் கவலையாலே சஞ்சல மதிகரிக் குதே ஓ இஸ்திரி வித்தேசையா தஞ்சமே தந்தஞ்சல் கூருமே.
3. எங்கணும் பகைக்கப் பட்டோம் மங்கியேது யரிற் கெட்டோம் இரட்சகா இரட்சியுங் கர்த்தாவே ஓ இஸ்திரி வித்தேசையா இத்தனை தாமதமேதையா.
4. எத்தனை மனக்கிலேசம் நித்தமும் சத்துருக்கள் மோசம் எந்தையே கைவிட்டு விடாதேயும் ஓ இஸ்திரி வித்தேசையா எப்படியுங் காத்தருள் மெய்யா.
5. கெட்டுப் போன மக்கள் தானே இஷ்டப் பிரசாதக் கோனே கிருபையாயிருஞ் சுவாமியே ஓ இஸ்திரிவித் தேசையா கிறிஸ்துவே உமக் கோலோலமே
6. பெருக்கத் துயரஞ் சூழ்ந்து குருக்கள் பகையுஞ் சேர்ந்து நெருக்க மனுபவிக்கிறோம் ஓ இஸ்திரி வித்தேசையா நெஞ்சக முருக வில்லையோ.
7. ஆடுகள் சிதறிப் போச்சோ அன்னியருக் கிஷ்ட மாச்சோ பாடுபட்ட பட்சக் கோனாரே ஓ இஸ்திரி வித் தேசையா காடுகளிற் றேடிப் பாருமேன்.
8. மந்தை யைக் கிருபைக் கண்பாருஞ் சிந்தை யிற்று யரந் தீரும் சந்ததந் தொழுவஞ் சேருமேன் ஓ இஸ்திரி வித்தேசையா வந்தன முமக் கிஸ் தோத்திரமே.
9. வேதநாயகன் சந்தப்பா மேசியா எங்கள் சொந்தப்பா ஆதர வருள் வானப் பாரே ஓ இஸ்திரி வித்தேசையா அம்பரா சமையங் காவாவே.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal