நீயே யெனையாளும்
neeyae yenaiyaalum
நீயே யெனையாளும் அம்பரா மனுடாவதாரா.
நேயே வானினின்று வந்தாயே பராபரன்றன் சேயே கிருபை புரிவாயே என் முன்னிற்பாயே
1. ஆதியனந்த பரஞ் சோதி திவ்விய அருமைக் கிறிஸ்து வேயென் நீதி சாதியனைத்து மீட்க மாதின் வித்திலுதித்த ஏதமில்லாத யேசுநாத ஜீவாதிபதி. - நீயே
2. அந்தா அனாதிபிதா மைந்தா அடியார்க் கருள் புரியும் பாதார விந்தா நந்தா தருள் செயுமனந்தா பாவிகளுக்குச் சொந்தா சமையமிது வந்தாளுனக் கபையம். - நீயே
3. துங்கா சுவிசேடப் பிரசங்கா மருள் துன்னுங் கொடுமையின் காலங்கா மங்கா வரப்பிரசா னங்கா மரணவேளை பங்காக நின்றருள் செயுங் காரணப் பிரதாபா. - நீயே
4. துக்கக் கவலை யொருமிக்கக் கூடித் துன்னும் விசாரத்தாலே வாடி அக்கிரமத்தின் கிரிகை மிக்கப் பெருக்கமாகி அந்த காரத்தின் மக்கள் கொந்தளித்து நிற்கிறார்கள். - நீயே
5. ஈட்டுத்திற மிலானைக் கூட்டு பரம நாட்டுக் கிருபையைப் பாராட்டு மாட்டுக் கொட்டிற்குள் வந்த ஆட்டுக் குட்டியுனக்கு நீட்டுப்புகழ் நெல்லையாள் பாட்டுப் படிக்கிரங்கி. - நீயே
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal