நீ தேடும் நிம்மதியை என் இயேசு
nee thedum nimmadhiyai en yesu
நீ தேடும் நிம்மதியை என் இயேசு தந்திடுவார் நீ தேடும் விடுதலையை என் நேசர் தந்திடுவார் நாசம் ஏதும் அணுகாமல் நேசர் உன்னை - காத்திடுவார் நிற்பதும் நிலைப்பதும் என் தேவ கிருபையே - இதை நீயும் இன்று மறந்திட்டாலே - நிம்மதி வாழ்வினில் இல்லையே
வருத்தப்படடு பாரம் சுமந்துவாழ்ந்திட்ட நாட்களெல்லாம் வேதனை வியாகுலம் தீராத சோதனை அஞ்சிடாதே அன்பர் இயேசு உன்னருகே - நிற்கின்றார் அழைத்திடு அழைத்திடு ஆண்டவர் நிம்மதி தந்திடுவார்
கலங்காதே என் நண்பனே; கண்ணீரை சிந்தாதே உந்தனின் துக்கங்கள் சந்தோஷமாகுமே உள்ளத்தில் அமைதியின்றி ஏங்கி நெஞ்சமே நிம்மதி தந்திடும் இயேசுவை நம்பி வந்திடு
உலகத்தின் மேன்மை செல்வம் - ஒன்றுக்கும் உதவாது உந்தனின் கஷ்டங்கள் அதினாலே தீராது இயேசுசாமி ஒருவர் மட்டும் உன்னையும் இரட்சிப்பார் நம்பி நீ வந்திடு நெஞ்சுக்கு நிம்மதி தந்திடுவார்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar