நன்றியாலே துதி பாடுவோம்
nandriyaalae thudhi paaduvom
நன்றியாலே துதி பாடுவோம் நன்றியாலே பாடிடுவோம் காலையும் மாலையும் மற்றெல்லா வேளையும் அல்லேலூயா சொல்லி பாடுவோம் ஆத்ம நேசரை பாடுவோம்.
இன்றுவரை எங்கள் மீது அன்பு வைத்தவர் இனிமேலும் சோர்ந்திடாமல் காக்க வல்லவர் துன்ப நேரத்தில் என் இன்பமானவர் அவரே எங்கள் ஜீவனானவர்
சஞ்சலங்கள் மத்தியில் தஞ்சமானவர் கொஞ்சமும் அஞ்சிடாமல் நடத்த வல்லவர் வியாதி நீக்கினார் என் பாரம் போக்கினார் அவரே எங்கள் தேவனானவர்
சர்வத்தையும் படைத்திட்ட சர்வ வல்லவர் சத்தியத்தை சாட்சியாக சொல்ல வைத்தவர் சாவை வென்றவர் என் நோயை தீர்த்தவர் அவரே பரிகாரியானவர்
வார்த்தையாக உலகில் வந்த தேவனானவர் வலது கரம் தாங்கி என்னை வாழ வைத்தவர் வாக்களித்தவர் எல்லாம் செய்து முடிப்பவர் அவரே எங்கள் இயேசுவானவர்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal