நல்லவர் நல்லவர்
nallavar nallavar
நல்லவர் நல்லவர் நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர் நாங்கள் இங்கே பாடும் எங்கள் இயேசு நல்லவர் உண்மை தெய்வம் இவர் உலகை இரட்சித்தவர் நன்மைகள் செய்தே இவர் நாடெங்கும் சுற்றியவர் நானிலத்தோர்க்கு நன்மைகள் செய்த நல்லவர்
அன்பாய் பிறரை நேசிப்பவர்க்கு இயேசு நல்லவர் ஆதரவில்லா அனாதைகட்கு இயேசு நல்லவர் திக்கற்றோர்க்கும் விதவைகளுக்கும் இயேசு நல்லவர் தீயவழிகளிலே மனந்திரும்பிடுவோர்க்கு இயேசு நல்லவர்
குருடர்களுக்கு பார்வை கொடுத்து இயேசு நல்லவர் குஷ்டரோகிகளையும் சொஸ்தமாக்கிய இயேசு நல்லவர் முடவர்களையும் நடந்திடச் செய்த இயேசு நல்லவர் முட்களின் நடுவே லீலியின் ரோஜா இயேசு நல்லவர்
பாவத்தைப் போக்கி பயமதை நீக்கிய இயேசு நல்லவர் பரலோக சந்தோஷம் பக்தருக்களித்த இயேசு நல்லவர் பரிமளதைலமாய் வாசனை தந்த இயேசு நல்லவர் பாரினில் இவர் போல் தெய்வமுமில்லை என் இயேசு நல்லவர்
இருளில் வாழும் ஜனங்களை மீட்ட இயேசு நல்லவர் ஈனலோகத்திற்காக சிலுவை சுமந்த இயேசு நல்லவர் மண்ணுயிர் காக்க தன்னுயிர் தந்த இயேசு நல்லவர் மூன்றாம் நாளில் மரித்துயிர்த் தெழுந்த இயேசு நல்லவர்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar