நாதாவுன்னடைக்கலம் நானே
naadhaavunnadaikkalam naanae
நாதாவுன்னடைக்கலம் நானே நான் பாடிப்பாடி நம்பியெண்ணினேன் நாதா நிதமுன் தம்பம் நண்ணினேன்.
ஆதிபிதாவினோ ரருமைத் திருக்குமாரா அற்புதப் பரப் பிரம திரித்துவ கிறிஸ்தேசு
1.அண்டமுமகண்ட பகிரண்டமு மெண்டிசை பர மண்டலமெல்லாம் படைத்த தேவே கோவே பண்டு நரர் செய்த பவமிண்டகலவே வடிவு கொண்டுலகில் வந்த மெய்மன்னாவே பாவே தொண்டர்களுக் கனுசாரி சுத்தக் கிருபை வாரி விண்டருள் மிகுமு தாரிமேலாம் பிரதானாசாரி மெய்ப்பர தற்பர சிற்பர வற்புத வேதப் பொருளே பாதுற்றருளே.
2. முன்னணையிலே பிறந்த மன்னனே நீர் செய்கிருபைக் கென்னவதிட் செய்வதறியேனே நானே சின்ன வயதானது தொட்டெண்ணரியத் தீமைபுரிந் துன்னருள் மறந்த சிறியேனே கோனே உன்னதப் பிதாவின் மைந்தா உரிமைப்பாதார விந்தா தன்னுயிரளிக்குஞ் சொந்தா சற்சிதானந்தானந்தா தற்சுயநிற்சய அற்செயவற்சிய சங்கா துங்கா சங்கீர்த்தனமே.
3. பெத்தலைப் பதியிலுற்ற நித்திய கிறிஸ்தரசே மெத்தவுந் தயவு செய்வாயையா நா னெத்தனை பாவியென்றாலும் சித்தமிரங்கிக் கண்பார்த்து ஈடேற்றுவதுன் கடன் மேசையா துய்யா சத்திய வேதப்பிரதாபா சகல நன்மைச் சொரூபா உத்தமத் திரித்துவ யோவா வொன்றாமொரேமெய்த்தேவா உம்பர வம்பர சம்பர சிதம்பர ஒசியன்னா இரட்சியு மன்னா.
4. மைந்தர்க ளகந்தையற வந்த பரனே யுனது சுந்தரப் பாதார விந்தங் கண்டேன் தொண்டன் சந்ததம் வேதநாயகன் தந்தபதங்கள் பாடிச் சங்கீர்த்தனங்கள் சொல்லிக் கொண்டேன் தொண்டன் வந்தனம் வந்தனம் கர்த்தா மகிமைப் பிரதாபத்தத்தா எந்தனையாளும் பரிசுத்தா யேசுவேஞா னப்பத்தா இஸ்திரி வித்திலு தித்த மகத்துவ வெருசலையதிபதி திருவிழியருள்புரி.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal