முன்னணையின் அரசே
munnanaiyin arasae
முன்னணையின் அரசே யெமை மோட்ச ராட்சியஞ் சேர்க்கத் திருவுளமோ இக்காட்சி முன்னணையின் அரசே.
பொன்னகர்த் தேவாதிபதியே வானோர் வணங்கும் பூரணப் பராபரன்றன் காரணத்திருக்குமாரா பூத்தவுலகையீ டேற்றவோ வினைமாற்றவோ சாமி புல்லிற் கிடப்பதும் வல்லபரனே சொல்.
1.பாவிகளுயிர் பிழைத்து மேவிவாழ்கவோ அதி பக்கிஷப் பரமனோடயிக்கமாகவோ ஜீவனேயும் மோடிருக்கவோ உம்பர்களுடன் சிறந்தொளிரவும் மறந்திகளவும் நிறைந்தன பலன் அடைந்துலவவும் தீய வெங்கடி மாயவுங் கிருபையா யெழுந்ததுவோ திரித்துவத் தொரு கிறிஸ்துன் மகத்துவம்.
2. மட்டில்லா அகண்டவெளியெட்டுங் கொள்ளுமோ நெடு வானமும் புவியுங் கூடியேனும் விள்ளுமோ கெட்டமனம் சற்றுமுள்ளு மோ நின்னன்பைமுற்றும் கிரிகித்துணர்கிலன் அறிவற்றிடு புலன் மறதிக் குணமுள நெறி தப்பிய களன் கேள்வி மிஞ்சிய தாவீதின் குமராயிரங்குவையே கிருபைக் கதிசய பொறுமைக் கதிபதி.
3. தந்தலகை சொந்தடிமை வந்தனானையா மனச் சஞ்சலமிஞ்சுது சரண்தஞ்ச மேசையா எந்தனைக் கிருபைக் கண்பார்துய்யா மட்டற்றுயர்ந்த இரக்கமே மனவுருக்கமே கன பெருக்கமே வருதிருக்கருணையே யேதமே கெட வேதநாயகன் ஓதுதாயகமே யேசு ராஜ் உமக்கோசனா மனா.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal