மனுவேலே நம்மாலே
manuvelae nammaalae
1.மனுவேலே நம்மாலே மானிடனானார் ஏலேலே ஏலோகிம் பெத்தலேம் இடையர்கள் விடையடை கொட்டிலே கொட்டிலிலே புல்லலல்லாற் குணம் இல்லை நாம் நிசம் வெல்லெல்லாம் வெல்லா தெல்லாம் வெல்லல்லாம் மேசியா அருகினார் துள்ளலாம் மேவி வணங்கிக் கொள்ளலாம் கும்பிட்டு துதிபல சொல்லலாம்
2. இருபேரே செய்தாரே யேதனில் யேவை நந் தாயாரே தாயாலே வந்தாரே சறுவதயாபர தேவாரே தேவர்க் கெல்லாந் தேவாரே சிறுபிள்ளை யானார் வெல்லல்லாம் வெல்
3. மூவரும் ஒருவர்தான் முடிவிலாக் கடவுளர் பிடியரேன் ஏனோ தான் மனுடர்வான் ஏறவே தாழ்ந்தார் நன்மைக்கோன் கோன்குடில் நீடியே கொற்றவன் வந்தார் வெல்லலாம். வெல்
4. நாற்றிசை நரர் யாரும் நாடியே துதிசெய நலந்தாரும் தாருமா சீராருஞ் சம்பனே தம்பமுன் பதஞ் சேருஞ் சேரவே தேவசிகாமணி செப்பினன் கும்மி வெல்லல்லாம். வெல்
5. ஐந்துபேர் புத்தியுற்றோர் அங்கையி லொளியுடன் சித்திபெற்றார் பெற்றாரேயருள் வற்றார் பேரின்ப முத்தி வினைநற்றார் நற்றார்பத்தி முற்றவே நண்ணினர் துன்னினர் வெல்லலாம். வெல்
6. ஆறு நகரடைக்கல மென் றறைந்தனர் வெல்லையிடைத்தலமுன் முன்வந்தார் பரிசுத்தன் முக்கிய கிருபை வரிசித்தன் வரிசித்தனைங் காயமுற வாதை யுற்றார் நாம் வெல்லலாம். வெல்
7. எழு தூத ரெக்காளம் ஏத்தவே வந்திங்கெமையாளும் ஆளவே யோரளம் அகமகிழ்ந்தர்ச்சனை சொலுநாளும் நாளும் நாளுந் தயைநீளும் நாதனைநம்பினர் வெல்லலாம். வெல்
8. எட்டுபேர் முன் காலம் ஏகினர் பேழையிலனுகூலம் அனுகூல மனுக்கோலம் ஆகினராலே முழுஞாலம் ஞாலத்தனைவர் கெதிகண்டார் சீலத்துடனே வெல்லலாம். வெல்
9. ஒன்பதாம் மணியமையம் உயர்குரு சானதிலுயிர் கொலையும் கொலைந்துயிரத் தெழுந்தசெயம் கூர்ந்தெமை யாளத்ததி சமையம் சமையமையா நின்னபையம் தாழ்ந்தோம் நாமோம் வெல்லல்லாம். வெல்
10. பத்துக்கற்பனைச் சீனா பருவதமேற்றரு தான்றானா தானானே குடிலானா சார்ந்திடு மெளியர்க்கிதுவானா வானேயீய வந்தானா வந்தான்பற்றி வெல்லலாம். வெல்
11. பதினொரு தாசுக்கும் பணமொன்று கொடுத்தே நேசிக்கும் நேசித்தே உபதேசிக்கும் நித்தியன் மாபர நேசிக்கும் தேசிகனே எமை வாழ்விக்க தேக மெடுத்தார் வெல்லலாம்.
12. பன்னிருகோத்திரர் பட்சம் வைத்தே பணிதோத்திரர் தோத்திர மேத்தினர் தொகையிலா வான சாத்திரர் சாத்திரக்கிறிஸ்து விச் சேத்திரர் சனந்தினம் வாழிவெல்லலாம் .வெல்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal