மங்களம் மங்களமே
mangalam mangalamae
மங்களம் மங்களமே சுப மங்களம் மங்களமே மானுவேலி யேசு மேசியா மகராயனுக்கே
1. சங்கை யதிபனுக்கே தயை தங்கு மனாதியர்க்கே தான வான ஞான மோன சுவாமி தற் சோதியர்க்கே - மங்
2. நித்திய வஸ்துவுக்கே சதா துத்தியங் கிறிஸ்துவுக்கே நேச விசு வாசர் வாச ராச ராசாதி பர்க்கே - மங்
3. மாதிடம் தந்தவர்கே மரி மாதிடம் வந்தவர்க்கே மைந்த ரெங்கள் பந்தம் தீர சிந்தை மகிழ்ந்தவர்க்கே - மங்
4. சாவைத் தவிர்த்தவர்க்கே பேயின் தலையை மிதித்தவர்க்கே சபையின் மணவாளனுமாம் தலைமை சக்கராதி பதிக்கே - மங்
5. விண்ணோர் மண்ணோர் வாழ்க குரு வேந்தர் துரை கவிஞர் விரத்தர் தருமர் யாரும் வாழ்க மேதினி வந்தவர்க்கே - மங்
6. நற் சுவிசேடருக்கே பவ நச்சறு தேசிகர்க்கே நயமாய்த் துதியா யெலியா சொலிய நாத கிருபாசனர்க்கே - மங்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal