மனமே ஓவுன்னதம்
manamae ovunnadham
மனமே ஓவுன்னதம் மறை தந்தவனே வந்தனர்
கனமிகுந்த திருக்குமாரன் கருணையாய் நரருருவமாகினார்.
1.ஆதிசர்ப்பத்தின் தலையையுடைக்க அகிலத்தின் பவமனைத்துந் துடைக்க வேதமறையினூடு சிறந்த மேசியா பிறந்தார்.
2. ஆகனமிகும் மகிமைத் தேவனார் யாவருக்கும் அருள்செய மேவினார் ஏகமுதல்வனா மொரு வஸ்து இயேசு ராஜ கிறிஸ்து.
3. நானிலத்தின ராள் பிழைக்கவே ஞான நன்மை களே தழைக்கவே வான ராட்சியஞ் சேர்ந்து வந்தது மானுவேல் பிறந்தார்.
4. நாம் நடத்தியபடி செய்யாமல் நம்முட மேலுக்கிரம் வையாமல் ஆ மகத்துவமே கதித்தவ னாதி யானுதித்தார்.
5. நாதனார் மனுவாய் வந்திருக்க வேதநாயகன் பதங்கள் பெருக்க நமக்கிப் போது கவலையேது நாம கீர்த்தன மோது.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal