மன வாதை யடைந்த
mana vaadhai yadaindha
மன வாதை யடைந்த கன பாதகன் வஞ்ச மறவே கிருபை கூரையா
சனவானவர் சங்கம் அனைவோரும் வணங்குந் தவிராச சுதந்திர திவிய யேசு நரேந்திரா மன
1.பாவிக் குந்தன்மேல் விசுவாசமே திருப் பாதந் துணைதரும் விலாசமே சீவனே நீரெனக்கதி நேசமே தேவரீர் சித்தத்துக் கேற்க நடக்கச் செய்யும் பிரகாசமே
2. கடியுங் கொடுமையாகச் சீறுதே மாயக் கலக உலகம் பழி கூறுதே சடமுந் திடமில்லாமல் மாறுதே மிகத் தயங்கி மனதெல்லாம் வேசாறுதே சுவாமி
3. ஞாயப்பிரமாணம் குற்றம் சாட்டுதே எந்தன் நடக்கை யெலாம் பொல்லாப்பில் மாட்டுதே மாய பிரபஞ்ச மிச்சை காட்டுதே பாவ வழியிலென்னை யிழுத்தாட்டுதே சுவாமி
4. கங்குல் பகலுங் கண்ணீர் ஓட்டமே நித்தங் கவலை பிடித்தென் முகம் வாட்டமே யெங்கே பார்த்தாலும் மா போராட்டமே கெட்ட ஏழைக்குன் பதமே கொண்டாட்டமே சுவாமி
5. பாதுகாத் தருளுதாரியே மிக்க பரம ஞானக் கருணை வாரியே வேதநாயகனனு சாரியே யேசு மேசியா நல்லுபகாரியே சுவாமி
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal