மலைகள் விலகினாலும்
malaigal vilaginaalum
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயரிட்டாலும் என் கிருபை உன்னைவிட்டு விலகாதடா என் கரம் உன்னை விட்டு பிரியாதடா
என் மகனே மகனே நீ மறந்து விடாதே மகளே மகளே மனம் தளர்ந்து விடாதே
கைகொடுத்து தூக்கிவிட காசு பணம் கொடுத்து உதவ யாருமன்றி நீயும் கலங்கி நிற்கவில்லையா என்னுடைய வலக்கரத்தால் உன்னை நான் தாங்கலையோ உள்ளங்கையில் உன்னை வரைந்து உம் முகத்தை பார்க்கலையோ நீ நடக்கும் பாதையில் நான் கூட வரவில்லையா நான் உன்னை விசாரிக்கும் தகப்பனில்லையோ (மகனே)
சூழ்நிலைகள் மாறிடலாம் சுற்றத்தார் வெறுத்திடலாம் சேனைகளின் கர்த்தர் இருக்க சோகம் ஏனம்மா பெற்றவரின் பாசமுமில்லே கட்டினவன் நேசமில்லே அண்ணன் தம்பி ஆதரவில்லே அக்கா தங்கை அன்பொன்றுமில்லே நேச மணவாளன் கூட இருக்கிறாராம்மா இயேசு உன்னை வாழவைப்பார் கவலை ஏனம்மா (மகனே)
வாலிபனே வாலிபனே வேலைகளை தேடித் தேடி அங்குமிங்கும் அலைந்து நீயும் சோர்ந்து போனாயோ உன்னுடைய இளமையில் உன் சிருஷ்டிகரை நினைதிடுவாய் உன்னுடைய வாலிபத்தை எனக்கென்று கொடுத்திடுவாய் உன் தேவன் உன்னை விட்டு விலகிட மாட்டேன் உயிருள்ள தெய்வம் உன்னை கைவிடமாட்டேன்(மகனே)
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar