மகிழ்ந்து பாடு சேர்ந்து பாடு
magizhndhu paadu serndhu paadu
மகிழ்ந்து பாடு சேர்ந்து பாடு என்ன ஆனந்தம் அன்பர் இயேசு தேடியே வந்து என்னை இரட்சித்தார் அன்பர் இயேசு தேடியே வந்து நம்மை இரட்சித்தார் என
மாய லோக சந்தோஷங்கள் மாறி போகுமே - நம் காயமதில் நியாயத் தீர்ப்பு வந்து சேருமே இப்போதே உலக சினேகம் விட்டு விடுவோம் எப்போதுமே ஆயத்தமாய் விழித்திருப்போம்
இன்ப துன்ப நேரத்திலும் இன்பம் அவரே இன்றும் என்றும் மாறா செல்வம் நல்ல இயேசுவே விண்ணின் இன்பம் இங்களித்தார் என்ன பாக்கியம் மண்ணின் இன்பம் வெறுத்து நாம் ஆயத்தமாவோம்
இத்தரையில் இன்றும் என்றும் இயேசு போதுமே உத்தமமாய் சத்தியத்தை பற்றிக் கொள்வோமே சாட்சியாக அவர் முன்னே நின்றிடுவோம் ஆட்சி செய்ய அதிகாரம் பெற்றிடுவோம்
மாண்டுபோன பரிசுத்தர் மீண்டும் வருவார் நம் ஆண்டவரும் அவரோடு சேர்ந்து வருவார் மத்திய வானில் சந்திக்க நாம் ஆயத்தமாவோம் அத்தனோடு சொர்க்க இராஜ்ஜியம் சேர்ந்திடுவோம்
நேசமென்னும் கொடி எந்தன் மேல் பறக்குதே சேதமொன்றும் அணுகாமல் என்னைக் காக்கவே ஓசையோடு பாடிடுவேன் நல்ல மேய்ப்பரை ஆசையோடு பின்பற்றுவேன் அவர் தாசரை
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal