குற்ற மெத்தத் தனையோ
kutra methath thanaiyo
குற்ற மெத்தத் தனையோ அத்தனையும் பொருத்து நீயென் குறை தீர்த்துத் தற்காத் தெனக் கருள்புரிவாய்.
1.நித்திய தத்துவத்துயர்ந்த முற்றொழித் திரித்துவ தேவே அர்ச்சயப் பிதாவினுக்கோர் உச்சிதத் திருக்குமாரா பொஸ்தகத் துரைப் பிரகாரம் பெத்தலைப் பதிக்குள் வந்த பூரணக் கிருபை சிறந்த காரணக் கிறிஸ்துவே என்
2. அச்சமற்ற தக்கிரமித்த துச்சணக் கிருத்துவமான அக்கிரமத்தின் மக்களுக்குள் விக்கிரகத்திடத்தி லோடிப் பச்சிலைத் தளிர்களிட்டு லட்ச லெட்சங் கற்சிலைக்கும் பட்சம் வைத் தலைக்கழிந்த லச்சை கெட்ட பாவிநானென்
3. துற்குணத்தி லுற்பவத்த ழுக்கறத் துடைத்துன் வேத சொற்றிரத்து நற்குணப்ப டுத்தியற்புதப் பிரகாரம் முற்பவத் தருக்களித்தி ருக்கனைத்தையுந் தொலைத்து முக்கியப் பிரதாப மாயுன் பக்கிஷக் கிருபையளித் தென்
4. சிஷ்டி யாவையும் படைத்த மட்டிலா மகத்துவ தேவே கெட்ட மாந்தர் வாழ்க மாட்டுக் கொட்டிலிற் பிறந்த கோவே திட்டமாய் வேதநாயகன் கட்டிய பாவுக் கன்பாவே இஷ்டமே யெனக்கு நல்ல திஷ்டமே சிரேஷ்டமே யென்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal