கொஞ்சும் கிளி பேசுமே உந்தன்
konjum kili pesumae undhan
கொஞ்சும் கிளி பேசுமே உந்தன் அன்பை கூவும் குயில் பாடுமே கல்வாரி அன்னை எத்தனையோ மீறுதல் இயேசுவே ஆறுதல் விந்தைக் கிறிஸ் இயேசுவே - உம்மைக் காண கண்கள் ஏங்குதே தந்தையே உம் அன்பைப் பாட எந்தன் நெஞ்சம் ஏங்குதே
வேடன் விரித்த வலைளில் சிக்கி பரிதவிக்கும் கலை மானப் போல் சாத்தானின் பிடியில் இருந்து என்னை மீட்ட ரட்சகனே - விந்தைக் கிறிஸ் இயேசுவே
சிறகொடிந்த பறவையைப் போல நம்பிக்கையை இழந்த போது என்னைக் கரம் பிடித்தவரே என்றும் தாங்கி நிற்பவரே - விந்தைக் கிறிஸ் இயேசுவே
திசை மாறிய கப்பல் போலே சீர்குலைந்து தவிக்கும் போது வழிகாட்டும் கலங்கரை விளக்காய் வாழ்வு தந்த நாயகனே - விந்தைக் கிறிஸ் இயேசுவே
நாதியில்லை என்று சொல்லி பாதியில் கைவிட்டது சொந்தம் ஆதியில் உம் அநாதி சிநேகம் அதுவே என் நித்திய பந்தம் ஆண்டவரே நீர் என் சொந்தம் - விந்தைக் கிறிஸ் இயேசுவே
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar