கிருபைப் பரா கிருபைப் பரா
kirubaip paraa kirubaip paraa
கிருபைப் பரா கிருபைப் பரா கிருபைப் பரமேசுரா கீர்த்தனம் சங்கீர்த்தன மிஸ் தோத்திரம் சருவேசுரா
1. அருமைப் பிதாச் சுதனரூபி அட்சயத்திரியேகமே அனந்த சதானந்தரு ளானந்தப் பிரவாகமே.
2. அதிக சவுரிய வல்லமை மகிமைப் பிரதாபியே அதிசய வினோத கிருபாசனத் தோர் ரூபியே.
3. பரம தயாபர கருணாம்பர உனத நேசமே பகர முடியாத பரிபூரண விலாசமே
4. உணரவரி தானவுயர்வான அபிதானமே யுருவமிலா துவமை யிலா தொளிர் பரம ஞானமே
5. பரிசுத்தம் நீதிக்கண் முக்கிய பாக்கிய சத்ய தேவனே பரிவுற்ற பூரண பக்கிஷாபதி நித்திய ஜீவனே
6. அருள் செய்பரா அருள் செய்பரா அனந்த சதாகாலமே அம்பராவே காம்பரா கருணாம்பரா ஓலோலமே.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal