கிருபை கூருமையனே
kirubai koorumaiyanae
கிருபை கூருமையனே பாவியென் சிறுமை தீரு மெய்யனே
நறுமையே மிருந்த பொருமைத் தேவனே நின்
1. ஆறு லெக்ஷண தேவா அடியர்க்குத் தேறுதலருள் பாவா திருமறை கூறுங் கருணை யோவா குறையறப் பேறுபெறச் செய் ஜீவா பெரியவா ஈறிலா துயர்ந்த மாறில்லா வஸ்துவே
2. பத்தர் தொழுஞ் சருவேசா பரிந்தருள் வைத்த சத்திய வாசா மகாபரி சுத்தக் கிருபையி நேசா சுயாதிப முத்தொழிற் றருமீசா முழுதுமென் மத்தியஸ்தனான நித்திய கிறிஸ்துவே யுன்
3. பாவத்தின் வழிநடந்தேன் பசாசுடன் சாபத்திலே கிடந்தேன் சாதா நித்திய கோபத்தையே அடைந்தேன் கொடுமையின் ஆபத்தில் மனமுடைந்தேன் அடிமையை மாபத்திரத் தொடென் பரதாபத்தைப் பார்த்திரங்கி
4. சரணஞ் சரணம் நாதா தவிக்கிற தருணம் தருணம் வேதா தயாபர கிரணமிலங்கு பாதா கிலேசங்கள் திறணமுறாத நீதா திடுக்கிடும் மரண வேளையிலும் கரணமயங்கும் போதும்
5. சாதிகள் பகையாச்சு சலித்தது பேதையர் சொலும் பேச்சு பிரட்டர்கள் பாதையும் வலுநீச்சுப் பாழிலென் வாதையின் பெருமூச்சு மயக்கற வேதநாயகன் சொல் லாதிமூலமே நின்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal