கிருபா கரனே தோத்திர
kirubaa karanae thothira
கிருபா கரனே தோத்திர மையாயேசு கிருபா கரனே தோத்திர மையா தோத்திர மையா நித்ய தோத்திர மையா என்றும் கீர்த்தன மையா சங் கீர்த்தன மையா
1.சருவே சுரனே தரும சாகரனே திரியேக பரா பரனின் றிருமகனே.
2. பரலோ கணியே படியோர் பிணையே மரியாளருள் மா தவ மா மணியே.
3. யேசு நாயகனே ஏகமா கினனே மேசியா சருவதரா தலவியா பகனே.
4. தற்பர திரித்து வமே கிறிஸ்து வாந்த வமே இஸ் பீரித்துச் சாந்துவி னாலயமே ஜெயமே.
5. மூலாதி பாலா மெய் நூலா செங் கோலா மனு வேலா சீலா அனு கூலா கோலா கலா.
6. ஆதியான வனே அருள்வான வனே வேத நாயகன் பாடலை மேவு வனே.
7. இப்பார் கொரு சேய் இஸ்ரவேல்க் கரசே அப்போஸ் தலரா ரிருபேர் சிரசே.
8. அற்புத காரணனே அட்சய ஆரணனே தற்பர சொரூப தயாபர பூரணனே.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal