கிறிஸ்தேசு நீ பரிந்து
kiristhesu nee parindhu
கிறிஸ்தேசு நீ பரிந்து அதிசுந்தரக் கிருபை சொரிந்து
1. நரஸ்துதி பாடா தனுக்கிரகித்த ஞானசீவப் பெருமானே நாதனே கைவிடாதேயுன் திருவடி நம்பினேன் பரம சீமானே
2. அறத்தியல் பில்லா அந்தகநரனே அடைக்கல மெனச் சரண டைந்தேன் அநித்திய உலகால் சத்துரு வினையால் அருந்துயரால் மன துடைந்தேன்
3. நின்னையல்லால் நிற்பாக்கியன் எனக்கு நிலைத் திருப்பதற்கிட மிலையே உன்னத ஞானத் தொளிவினில் ஒளிவே உச்சித ஞானக் கன்மலையே
4. எத்தனை சேதம் சோதனை வரினும் இரங்கி ரட்சியும் பரிவாலே சத்திய வேதாட்சர ரகசியமே தரும கருணை மனுவேலே
5. தந்தையும் தாயும் சகலமும் நீயே தமியனின் பிழை பொறுப்பாயே வந்தனம் துதி சங்கிர்த்தனம் தினமே மகிழ்தெனிதை யத்திருப்பாயே
6. வெல்லையிற் பிறந்த மேசியா அரசே மேன்மை ஞானப் பிரபலனே நெல்லையிற் சிறந்த வேதநாயகன்பா நேசதவிது காவலனே
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal