கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள்
kelungal tharappadum thattungal
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றாரு - இயேசு தஞ்சம் என்று தன்னிடத்தில் ஓடிவரும் மக்களுக்கு நன்மைகளைச் செய்து வந்தாரு
பெத்தலைளின் ஊரினிலே சத்தரத்தின் தொழுவத்திலே இயேசு சாமி பிறந்து விட்டாரு சூசை மரி மகனாய் வளர்ந்து வந்தாரு ஆறு வயதினிலே ஆரம்ப பள்ளியிலே பாடம் படிக்கச் சென்றாரு பரிசுத்த ஆகமங்கள் அறுத்து ஆறினையும் ஐயமின்றி கற்றறிந்தாரு மன்னாதி மன்னவரு மனுக்குலத்தின் இரட்சகரு மானிடரை மீட்க வந்தாரு
பன்னிரண்டு வயதிலே பஸ்கா பண்டிகைக்கு தேவாலயம் சென்றாரு - எருசலேம் தந்தையார் செய்து வந்த தச்சுத் தொழிலையே தனயனும் செய் வந்தாரே தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்து வந்தாரு அறிஞர்கள் தலைவர்கள் வியந்திட ஆலயத்தில் போதனைகள் செய்து நின்றாரு
முப்பதாம் வயதிலே யோர் தான் நதியிலே ஞானஸ்நானம் எடுத்தாரு - யோவானால் முழ்கிஸ்நானம் பெற்றாரு இவர் தானே என்னுடைய நேசகுமாரன் என்று பரலோகம் திறந்து சொன்னாரு
நன்றி கெட்ட உலகுக்கு நன்மை செய்த இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்தான் - யூதாஸ் சத்தமின்றி பிடித்துக் கொடுத்தான் முப்பது வெள்ளிக் காசை முன்னாலே வைத்தவுடன் நண்பனையே காட்டிக் கொடுத்தான் யூதாஸ் நாண்டு கொண்டு செத்து மடிந்தான்
சேனைகளின் தேவனை சிலுவையில் அறைந்ததால் சந்தோஷம் அடைந்தார்கள் சதிகாரர் சாத்தானின் தலையினை சிலுவையில் நசுக்கிட மரித்ததை மறந்தார்கள் - தேவ ரகசியத்தை அறியார்கள்
மரணத்தை ஜெயித்த மன்னாதி மன்னவரு மூன்றாம் நாள் உயிர்த்தெழந்தார் - இயேசு பரலோகம் சென்றடைந்தார் ஆயத்தம் உள்ளவரை அகாயம் சேர்த்திட ஆண்டவர் வந்திடுவாரு மத்திய வானத்தில் வந்திடுவாரு பரலோக நாட்டிலே நமக்கொரு வீட்டினை ஆயத்தப்படுத்துகின்றாரு பரிசுத்த வான்களை தன்னோடு அழைத்துச் செல்ல இயேசு வேகம் வருவாரு
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar