கருணாகரனே பரமே
karunaagaranae paramae
கருணாகரனே பரமே சுரனே கனிவினை தீர்க்கவந்த தனிமுதலேசுநாதா
1.அருணோதயமே பரமாதிசயமே அனந்த நன்மைத்தயாப முனைந்த வுண்மைப் பிரதாப அரியபரம்பர தருமசிதம்பர அறிவினிலங்கிய முறையின் விளங்கிய அருத்தவேத புராணவிசித்திரன் பெருத்தஞான பிரதாபசுமுத்திரன் அகிலமடங்கலு மகிமைபெறும்படி யனைமரியம்மனை தனையென முன்னணை ஆதியிலே யதமேவை யராடிய பாதக மாறமகா தயவாய் வரு.
2. பரனாதியிலே திருவாய்மையிலே பகுத்து விந்தையினோடு மகத்துவசந்தோட நீடு பரிவுடனே யறுதினமதிலே யுயர் பரமுல காவையுமருளிய நேரமே பாருலகந்தனிலோர் மனுடன்றனை யேவையரென் றொரு பாவையுடன்செய்து யடர்ந்த காவிடையிரண்டு மரந்தர அடர்ந்தசீவியம் நன்றறிவென்றொரு பழத்திலே பொசியாமல் விலக்கின வழிப்படாது பிசாசுட சொற்படி பாவையராரதின் தீவினையானர தாவீது சேயெனமேவுகுணாநிதி.
3. மறையாரணனே நிறைபூரணனே வலமைக்கொரே யோவாவே தலைமைத் தேவாதி தேவே வருகையைமா மறையிருடியரோ தின வரிசையினேர் தவிதரசனினூரயல் மந்தையினாயர்கள் வந்து பணிந்தெழ விந்தை மெஞ்ஞானியர் சிந்தையுவந்திட மகிழ்ந்து வானவர் பூதலர் பாதலர் புகழ்ந்து பாடியுமாடியுமே தொழ மரியவளுந்தியிலரிய பரன்றிரு மகனென அன்புடனரருருவங் கொடு மானிடர் யாவரும் வானிடமே பெற மாடடையுங் குடினீடிய சுந்தர.
4. ஒரு நாயகனே வருதாயகனே யுண்மைக் குண்மையதான வன்மைப் பரம ஞான ஓரனுகூலா சீர் மனுவேலா உலகறியானே வலமையுன் கோனே உனைநம்பினனே தனையம்பரனே உச்சித வேதா இரட்சியும்நாதா உத்தமசீவ திரித்துவ தேவ மகத்துவராச கிறிஸ்து மணாளா ஒழிந்திடாமலே யழிந்திடாமலே யுலைந்திடாமலே யலைந்திடாமலே ஓலமோல மோசியனாவே ஓதிய வேதநாயகன் பாவே.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal