கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவர்
kartharaith thudhiyungal avar nallavar
கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
உறங்குவாரோ இஸ்ரவேலரை காப்போர் உடையும் ஆகாரமும் அளிக்கிறவர் வலது பாரிசத்தில் உன் நிழலாயிருப்பவர் வலது கரம்பிடித்து வழி நடத்திடுவார்
நீதிமான் கைவிடப்பட்டதில்லை அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்ததில்லை நித்தம் கடன் கொடுப்பான் சத்திய பாதை நடப்பான் கர்த்தர் அவன் வழியில் பிரியமாயிருப்பார்
கர்த்தரின் அழைப்புக்கு இணங்கியவர் கைவிடப்பட்டதில்லை பாதையிலே சிங்கக்குட்டி தாழ்ச்சி அடைந்து பட்டினியாயிருக்கும் கர்த்தரை தேடுவோர்க்கோர் நன்மையுங்குறையாது
கர்த்தருக்காய் தன்னை வெறுத்தவர்கள் தரித்திரராய் ஆனதில்லை கர்த்தரின் சேவைக்காய் அள்ளி அள்ளி இறைத்தோர் ஆயிரமாயிரம் ஆசிர்வாதம் அடைந்தார்.
அன்பு ஐக்கியம் தேவக்கிருபை தேவை உன் தேற்றரவாளனவர் அக்கினி மதிலாய் அணைத்துன்னை காப்பார் விக்கினமின்றி காத்து வெற்றி வீரராக்குவார்
அல்லேலூயா அல்லேலூயா கூறுவோம் அனுதினம் அவர்துதி பாடுவோம் நாம் பெற்ற நன்மைக்காய் நன்றிகூறி வாழ்த்துவோம் ஒவ்வொன்றாய் எண்ணி ஓசன்னா கீதம் பாடுவோம்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal