கர்த்தர் நல்லவர் என்றும் கர்த்தர் நல்லவர்
karthar nallavar endrum karthar nallavar
கர்த்தர் நல்லவர் என்றும் கர்த்தர் நல்லவர் காத்திருந்து தேடுவோர்க்கு கர்த்தர் நல்லவர்
இத்தனை ஆண்டு கண்மணிபோல சுமந்து வந்தாரே இன்றும் என்றும் அன்று போல பாதுகாப்பாரே இன்ப துன்ப நேரத்திலும் இன்பம் அவரே இன்று வரை கரம் பிடித்த கர்த்தர் நல்லவரே
வாழ்நாளெல்லாம் சந்தோஷத்தால் மகிழ்ந்திடவே வாடிப் போகும் துன்பமெல்லாம் ஒழித்திடவே வாடாத கிரீடத்தாலே அலங்கரித்து நம்மை வாழ வைத்த தேவன் அவர் கர்த்தர் நல்லவரே
இயேசு என்ற நாமம் கொண்ட கர்த்தர் அவரே இன்னல் நீக்கி இனிமை தரும் வள்ளல் அவரே கானக பாதையிலே கருத்துடன் காத்து வந்த கன்மலை கிறிஸ்துவான கர்த்தர் நல்லவரே
சுத்த இருதயமுள்ளவருக்கு கர்த்தர் நல்லவர் சத்திய பாதை நடப்பவருக்கு கர்த்தர் நல்லவர் நித்திய தேவ பிள்ளைகளுக்கு கர்த்தர் நல்லவர் உத்தமத்தில் சோர்ந்திடாதீர் கர்த்தர் நல்லவரே
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal