கர்த்தனே காவுனதா
karthanae kaavunadhaa
கர்த்தனே காவுனதா விடப் பாம்பு கொடுந் தீம்பு திருக் காலை வருந்தினதா.
சித்தமாய் இவ்வுலகில் உற்ற கிறிஸ்து வேதா தீ வினையோ வினையோ எனமோ ஐயோ பாவி என்மேல் தயையோ இதுவேதான்.
1.கடிவினை கொடி தாகவே ஏவை இடத்தில் பட படத்துக் குடி கெடுத்த அதக்கிரம-கடிவினை கொடிதாகவே படுசாப மியாவுந் தீர்க்க இடு பலிக் கும்மைத் தாக்க பத்தர் பவத்தை யகற்றி மகத்துவ முற்ற திரித்துவ கிறிஸ்து மரித்தையோ - கர்த்
2. அண்ணலே அருமை மணியே ஆக மஞ்ச மணில் துஞ்ச வரும் வஞ்சவினை தணியே - அண்ணலே அருமை மணியே கண்ணாற் காணொண்ணா தேவா புண்ணா மைங்காய யோவா புண்ணிய பாவமோ எண்ணிலா நேசமோ விண்ணையு மீயவோ மண்ணிலே மாண்டையோ - கர்த்
3. ஒன்றான தேவ குமாரா உல கடுத்து வினை தடுத்து தயை கொடுத்து திடத்து பரா - ஒன்றான தேவ குமாரா என் றுனையான் பார்த்துய்வேன் சென்றாயினி என் செய்வேன் எங்குபறந்து செல்வன் எவ்விடந்துயர் துலைப்பன் இதுக்கோ மனு உருவம் எடுத்து மடிந்தாய் ஐயா - கர்த்
4. குருசேறி இறந்தாயோ புவி குலுங்கக் கடி கலங்க நடு விளங்கத் துயர் பட்டையோ - குருசேறி இறந்தாயோ மரண கஸ்திகள் சூழ்ந்து இரண முதிர மெய் பாய்ந்து மாயவு மானிரோ தூயனே நேயனே ஆயனே சொல் எலியாவின் சகாயனே - கர்த்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal