கர்த்தா பர்த்தா
karthaa parthaa
கர்த்தா பர்த்தா வெனைக்கா மேசியா சருவேசா கானான் ராட்சிய பாரத் தீசா தாவீது குமரேசா.
1. மார்த்தாள் மரியாள் பணி செயும் வித்தாரக் கிருபை நேசா மாசிலாப் பிரஸ்தாப வுச்சித இரட்சக ரேசு ராசா. - கர்த்தா
2. முன் னாளதமே வைபவத்தை மாற்ற வுதித்த வஸ்துவே மூடாற் றுமத்தின் கேடாற்றி யெனை யீடேற்றியருள் கிறிஸ்துவே. - கர்த்தா
3. மானார் கோனா ரும் போற்றி வணங்கும் பொற்றாளா சீனாச் சியோன் மலை வரும் ஞான மனவாளா. - கர்த்தா
4. மாட்டுக் கொட்டினில் வந்த ஆட்டுக் குட்டி யரே காட்டி நின்னருள் பூண்டியன்புபா ராட்டிக் கொள்வீரே. - கர்த்தா
5. சொந்தச் சீவனை யாட்டுக்காகத் தந்த நல்லாயனே துக்கப்பட்ட நராட்க்களை யிரட் சிக்க வந்த சகாயனே. - கர்த்தா
6. ஆதமம் மணனே வையம் மணி நானும் நிறுவாணி யானாலுமெனை மீட்டுக் கொண்டெனை யாண்ட கண்காணி. - கர்த்தா
7. அசரீரி ஓவுதாரி ஆறோனாசாரி யாதரி பராமரி வி சாரி தற்காரி. - கர்த்தா
8. வானோர் நெடுவானடு வினி லாட வந்தமேசையா வந்தனை தந்துனை வேதநாயகன் பாட மகிழ்ந்த வேசையா. - கர்த்தா
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal